ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்.
ஓட்டப்பிடாரத்தில் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு
- கவர்னகிரியில் சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா அவரது மணி மண்டபத்தில் இன்று நடக்கிறது.
- இதனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா அவரது மணி மண்டபத்தில் இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று மாலையில் குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் இருந்து வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் ஜோதி கொண்டு வரப்பட உள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தலைமையில் மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், அருள், வசந்தராஜ், சிவசுப்பு, சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டப்பிடாரத்தை சுற்றியுள்ள கவர்னகிரி செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.