எம்.பள்ளத்தூர் பகுதியில் ஆடவர் கை பந்தாட்ட போட்டியை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
நாகம்பட்டி ஊராட்சியில் கைப்பந்தாட்ட போட்டி
- நல திட்ட உதவிகள், ஆடவர் கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் மத்தூர் வடக்கு தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் குண.வசந்தரசு தலைமை தாங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சி எம்.பள்ளத்தூர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நல திட்ட உதவிகள், ஆடவர் கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்தூர் வடக்கு தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் குண.வசந்தரசு தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து தூய்மை பணியளர்களை கெளரவித்து நல திட்ட உதவிகள் வழங்கி , ஆடவர் கைப்பந்தாட்ட போட்டியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில விவசாய அணி துணை தலைவர் டேம் வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள், ஒன்றியத் துணை செயலாளர் ஜீவானந்தம். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி கதிர்வேல், செந்தாமரை சுப்பன், பூபதி ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், பால்மூர்த்தி கிளை செயலாளர்கள் வஜ்ஜிரவேல், அப்பாவு, கிளைபிரதிநிதி ஆசைத்தம்பி, வார்டு உறுப்பினர்கள் மாதவன், தமிழரசன், வேலு, அசோக்குமார், லிங்கேஸ்வரன், அன்பரசன். விவேகானந்தன், மாதவன் உள்பட ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.