உள்ளூர் செய்திகள்

பசுமை வீடுகள் கட்டும் பணியை மாற்றுத்திறனாளிகள் பார்வையிட்டனர்.

வத்தலகுண்டுவில் மாற்றுத்திறனாளிகளுக்காக பசுமை வீடுகள்

Published On 2022-11-30 09:35 IST   |   Update On 2022-11-30 09:35:00 IST
  • கணவாய்பட்டி ஊராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  • விடுபட்ட மாற்றுத்திறனாளி களுக்கும் அரசு வழங்கும் பசுமை வீடுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்தலகுண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சி தங்கமலை முருகன் கோவில் அடிவாரத்தில் கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

வத்தலகுண்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் அடிப்படையில் கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பஞ்சாயத்துக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் ஒரு பயனாளிக்கு 3 சென்ட் வீதம் 4 பேருக்கு 12 சென்ட் இடம் வழங்கி பள்ளிவாசல் தெரு அபுதாஹிர், சிக்கந்தர் அம்மாள் ஆகிய இருவருக்கு பசுமை வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

மேலும் பழைய வத்தலக்குண்டு வடக்கு தெருவை தெருவை சேர்ந்த முத்துஇருளன், எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை மேனகா ஆகிய 2 பேருக்கு இடம் ஒதுக்கியும் வீடு வழங்கப்படவில்லை. மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் தினேஷ் குமார் மாவட்டம் முழுவதும் அரசு தரப்பில் வழங்கும் பணிகளை தொய்வின்றி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.

எனவே இதேபோல் விடுபட்ட மாற்றுத்திறனாளி களுக்கும் அரசு வழங்கும் பசுமை வீடுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News