உள்ளூர் செய்திகள்
பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர்செடிகளில் பசுமை போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் தொடரும் உறைபனி பிரையண்ட் பூங்காவில் மலர் செடிகளை பாதுகாக்க பசுமை போர்வை

Published On 2023-01-19 12:24 IST   |   Update On 2023-01-19 12:24:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் கட்டமாக கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா மலர்செடிகள் நடப்பட்டன.
  • உறைபனியில் இருந்து மலர்செடிகளை பாது காக்கும் வண்ணம் பசுமை போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். அவர்களை கவரும் விதமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்த ப்பட்டு வருகிறது.

இதற்காக பிரையண்ட் பூங்காவில் பல்வேறு கட்டங்களாக மலர்செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் கட்டமாக கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா மலர்செடிகள் நடப்பட்டன. இவ்வாறு நடப்படும் மலர்செடிகளில் ஏப்ரல், மே மாதங்களில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கும்.

தற்போது குளிர்காலம் என்பதால் கொடைக்கான லில் கடும் பனி நிலவி வருகிறது. இரவு நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு உள்ளதால் புல்வெளி மற்றும் விவசாய நிலங்களில் உறைபனி படர்ந்து காண ப்படுகிறது. இதனால் விவ சாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளன.

6 டிகிரிக்கும் கீழ் வெப்ப நிலை பதிவாகி உள்ளதால் கடும் குளிர் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை யும் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படு கிறது. உறைபனியில் இருந்து மலர்செடிகளை பாது காக்கும் வண்ணம் பசுமை போர்வை போர்த்தப்பட்டு ள்ளது.

இதன்மூலம் செடிகளுக்கு உறைபனியின் தாக்கம் இல்லாமல் இருக்கும். மேலும் 3-வது கட்ட பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் உள்ள பூக்கள் ஏப்ரல், மே மாதத்தில் பூத்துகுலுங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வரு வதாக தோட்டக்கலைத்துறை யினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News