உள்ளூர் செய்திகள்
பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாத்தா பாட்டியர் தின விழா
- பேரக் குழந்தைகள் தங்களின் தாத்தா பாட்டிகளுக்கு பாத பூஜைகள் செய்து சிறப்பித்தனர்.
- சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சங்க மாநில தலைவர் காத்தவராயன் மற்றும் சேகர் கலந்துகொண்டனர்
பொன்னேரி:
பொன்னேரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாத்தா பாட்டியர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சங்க மாநில தலைவர் காத்தவராயன் மற்றும் சேகர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை பற்றி சிறப்புரையாற்றினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பேரப்பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளை தாத்தா, பாட்டிகள் கண்டுகளித்தனர். பின்னர் பேரக் குழந்தைகள் தங்களின் தாத்தா பாட்டிகளுக்கு பாத பூஜைகள் செய்து சிறப்பித்தனர். இதுவரை எந்த மாவட்டத்திலும் நடைபெறாத ஒரு நிகழ்வாக இருந்தது என இதில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். விழா ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் இ.வி. ரமேஷ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.