கோப்பு படம்
திண்டுக்கல் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்
- திண்டுக்கல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
- துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குள்ளனம்பட்டி:
அடியனூத்து ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இதில் துணைத் தலைவர் ஜெயராமன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜா, ஊராட்சி செயலர் ஜான் போஸ்கோ பிரகாஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இதில் துணைத்தலைவர் பானுப்பிரியா, ஊராட்சி செயலர் சுரேஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தோட்டனூத்து ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இதில் துணைத் தலைவர் சரவணன், ஊராட்சி செயலர் நாகராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பல கலந்து கொண்டனர்.
சிறுமலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெள்ளிமலை தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இதில் துணைத் தலைவர் குமார், ஊராட்சி செயலர் முத்துக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இதே போல் 12 ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.