பர்லியார் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
- கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
- கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
அருவங்காடு,
குன்னூர் அருகே உள்ள பர்லியார் ஊராட்சி சார்பில் கோடமலை ஒசட்டி பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுசீலா தலைமைதாங்கினார்.
துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிஅளிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற தோட்டக்கலை துறை அதிகாரிகள் மங்குஸ்தான் உள்ளிட்ட 5 வகை பழக்கன்றுகள், தேயிலை நாற்றுகள் ஆகியவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள தேயிலை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஸ்பிங்லர் கருவி மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.