மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் நிறுவனர் அன்பரசன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் தாளாளர் சங்கீதா அன்பரசன்,மேலாளர் பூபேஷ் முதல்வர் சர்மிளா ஆகியோர் உள்ளனர்.
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
- பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குறைசொல்லி வளர்க்க கூடாது.
- ஓவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள்தான் அவனை சரியான பாதையில் செல்ல வழிகாட்டியாக அமையும்.
கிருஷ்ணகி,
கிருஷ்ணகிரி அருகே பெங்களுரு தேசிய நெடுஞ்சா லையில் குந்தாரப்பள்ளி கூட்டு ரோட்டில் இயங்கி வரும் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரிப்பள்ளியில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி பயின்று வரும் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் பள்ளியின் நிறுவனர் அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றும் போது குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் ரோல்மாடல் என்றும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குறைசொல்லி வளர்க்க கூடாது.அவர்களை ஊக்கப்படுத்தும் விதமா கவும், பெற்றோர்களின் வார்த்தைகள் நம்பிக்கைகு உரியதாக இருக்க வேண்டும்.
ஓவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள்தான் அவனை சரியான பாதையில் செல்ல வழிகாட்டியாக அமையும்.
பள்ளியிலும் ஆசிரியர், ஆசிரியைகள் ஓவ்வொரு குழந்தைகளின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி பெற்றோர்களிடமும் அவர்களின் குழந்தைகளின் திறமைகளை வளர்க்க பேருதவியாக இருக்க வேண்டும்.
பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்து விட்டு கடமை முடிந்து விட்டது என்று எண்ணி விடக்கூடாது.
பள்ளியின் பங்களிப்பு 75 சதவீதம் என்றால் 25 சதவீதம் பெற்றோர்களின் பங்களிப்பு மிக அவசியம். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சிறப்பான முறையில் கண்காணித்து வளர்க்க வேண்டியது முக்கிய கடமையாகும்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஓன்றாக ேசர்ந்து பயணித்தால் மட்டுமே ஓரு நல்ல மாணவனை இச்சமு தாயத்திற்கு முன்னேற்ற முடியும் என்றார்.
இவ்விழாவினை பள்ளியின் தாளாளர் சங்கீதா அன்பரசன் தலைமையேற்று நடத்தி வைத்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மேலாளார் பூபேஷ் வரவேற்றார். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் சர்மிளா நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.