உள்ளூர் செய்திகள்

ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

விபத்தில் இறந்த பள்ளி மாணவிக்குநஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

Published On 2023-03-28 08:44 GMT   |   Update On 2023-03-28 08:44 GMT
  • தனலட்சுமி (வயது 16). நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார். இவர் , பஸ்சில் நின்றபடி பயணம் செய்த மாணவி தனலட்சுமி படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார்‌.
  • இதில் பஸ்சில் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே மாணவி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த இடையார் குப்பம் சிறுநங்கைவாடி பலாப்பட்டு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அல்லி முத்து. இவரது மகள் தனலட்சுமி (வயது 16). நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 22.6.2018 அன்று சாத்திப்பட்டு - கடலூர் செல்லும் அரசு பஸ்ஸில் ஏறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பஸ் கொஞ்சிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால், பஸ்சில் நின்றபடி பயணம் செய்த மாணவி தனலட்சுமி படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சில் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே மாணவி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக அவரது பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முக்குந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த தனலட்சுமி குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 9 லட்சம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதனை தொடர்ந்து நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டதில், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News