உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து கண்டக்டரை தாக்கிய 3 வாலிபர்களை படத்தில் காணலாம்

பண்ருட்டி அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கி பஸ் கண்ணாடி உடைப்பு:3 வாலிபர்கள் கைது

Published On 2023-01-01 08:08 GMT   |   Update On 2023-01-01 08:08 GMT
  • அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.
  • அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கடலூர்:

விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும். அதுபோல நேற்று இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிவிடுகின்றனர். இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News