உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவர்களுடன் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்.

விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-10-01 15:50 IST   |   Update On 2022-10-01 15:50:00 IST
  • சேலம் நகர்ப்புற மைய குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
  • இந்த போட்டிகளில் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

வாழப்பாடி:

சேலம் நகர்ப்புற (பி) மைய குறு வட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கடந்த மாத இறுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்றது. கபடி போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

பூப்பந்து போட்டியில் இளையோர் பிரிவில் 2-ம் இடமும், மேல் மூத்தோர் பிரிவில் முதலிடமும், இறகுப்பந்து போட்டியில் மூத்தோர் தனி நபர் பிரிவில் 2-ம் இடமும், மூத்தோர் இரட்டையர் பிரிவில் 2-ம் இடமும், மேல் மூத்தோர் தனி பிரிவில் 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

இப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவர் கவுதம், கின்னஸ் சாதனை சிலம்பம் போட்டியில் பங்கேற்றார். மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் பொதுப்பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்களும் பாராட்டினர்.

Tags:    

Similar News