உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
தேனியில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி:
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை யில் மகப்பேறு டாக்டர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்க வலியுறுத்தியும், அரசு மகப்பேறு டாக்ட ர்களை முகாம்களில் பங்கேற்க வைப்பதை தவிர்க்கவும்,
மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பேரா சிரியர்களை மரியாதை இல்லாமல் பேசிய மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜெய் கணேஷ், செயலாளர் அரவாளி, பொருளாளர் பால கிருஷ்ணன், டாக்டர்கள் சிவா, பிரேமலதா, ருக்மணி, வனிதா, மகாலட்சுமி உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.