உள்ளூர் செய்திகள்

காசி விஸ்வநாதர் கோவிலில் முகமூடி கொள்ளையன் கைவரிசை காட்டும் காட்சி.

கடலூர் ஜவான் பவன் சாலையில் காசி விசுவநாதர் கோவிலில் ெவள்ளி கிரீடம், தங்கத் தாலி திருட்டு: முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

Published On 2023-01-08 07:36 GMT   |   Update On 2023-01-08 07:36 GMT
  • இதில் கோவில் கதவில் பூட்டு உடைந்து கோவி லுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது.
  • போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

கடலூர்:

கடலூர் கம்மியம் பேட்டை ஜவான் பவன் சாலையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் சண்முக ஞானிகள் சித்தர் பீடம் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் நேற்று இரவு பூசாரி முருகையன் வழக்கம் போல் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்கு கோவிலுக்கு வந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவில் கதவில் பூட்டு உடைந்து கோவி லுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து பூசாரி முருகையன் உடனடியாக பீரோவை சென்று பார்த்த போது அதில் வைத்திருந்த2 வெள்ளி கிரீடம் மற்றும் தங்க தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்பு லியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து 2 கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத் தாலி ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. திருடி சென்ற பொருட்க ளின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ஆகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்க ளை வலைவீசி தேடி வரு கின்றனர்.

Tags:    

Similar News