உள்ளூர் செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு 232 ரூபாய் குறைவு

Published On 2023-11-01 04:32 GMT   |   Update On 2023-11-01 04:38 GMT
  • இன்று தங்கம் விலை பவுனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது.
  • 1 கிராம் தங்கம் 5,686-க்கும், பவுன் 45,488 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சென்னை:

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும்.

இந்நிலையில், தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை உச்சமடைந்து உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கிவிட்டது.

கடந்த 19-ம் தேதி பவுன் ரூ. 44,680-க்கு விற்ற தங்கத்தின் விலை தொடந்து அதிகரித்து சில தினங்களுக்கு முன் ரூ. 46 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.

நேற்று ஒரு கிராம் 5,715 ரூபாய்க்கும், ஒரு பவுன் 45,720 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,715- ஆகவும், பவுன் ரூ. 45,720 ஆகவும் இருந்தது. இன்று ஒரே நாளில் கிராம் ரூ.29-ம் பவுன் ரூ. 232-ம் குறைந்துள்ளது. இன்று கிராம் ரூ. 5686-க்கும், பவுன் ரூ. 45,488-க்கும் விற்பனை ஆகிறது.

Tags:    

Similar News