உள்ளூர் செய்திகள்

ரெயில் மறியல் போராட்டத்துக்கு முயன்ற காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது

Published On 2023-04-15 15:57 IST   |   Update On 2023-04-15 15:57:00 IST
  • ஓட்டல் சிமினி அருகே காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.
  • 10 பெண்கள் உட்பட 120 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு:

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை கண்டித்தும், மோடி அரசை கண்டித்தும் ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று காலை ஓட்டல் சிமினி அருகே காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். மாநகர மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார்.

மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர் ஜாபர் சாதிக் அல்டிமேட் தினேஷ் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ராஜா சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜவகர்அலி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் அண்ணா, சச்சிதானந்தம் பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ரெயில் மறியலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது காளை மாட்டு சிலை அருகே டவுன் டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில் 10 பெண்கள் உட்பட 120 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் கொடுமுடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும், இதை கண்டித்து பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டமும் நடைபெற்றது. 

Tags:    

Similar News