உள்ளூர் செய்திகள்

சவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம் எதிரொலி: ஓட்டல்கள், சிக்கன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2023-09-19 15:47 IST   |   Update On 2023-09-19 15:47:00 IST
  • உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா, தலைமையில் ஆய்வு செய்தனர்.
  • நிறமூட்டிகள் இறைச்சி களில் கலக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர்.

தருமபுரி,  

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமியின் உயிரிழப்பு மற்றும் 40 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் தமிழக மக்கள் நல வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்த நிலையில் தருமபுரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தருமபுரி நகரப் பகுதியில் உள்ள முக்கிய இறைச்சி உணவக கடைகள் மற்றும் சவர்மா விற்பனை செய்யும் கடைகள். கிரில் சிக்கன் உள்ளிட்ட கடைகளில் தருமபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா, தலைமையில் அலுவலர்கள் நந்தகோபால், குமணன் கந்தசாமி உள்ளிட்டோர் திடீர் ஆய்வு நடத்தினர்.

இதில் இறைச்சிகள் பதப்படுத்தப்பட்டு உள்ளதா? எனவும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இறைச்சிகள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும், செயற்கை நிறமூட்டிகள் இறைச்சி களில் கலக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

Similar News