உள்ளூர் செய்திகள்
சமூக ஊடகங்களில் இருந்து வெளியே வர வேண்டும் - நீதிபதி அறிவுறுத்தல்
- சமூக ஊடகங்களில் மூழ்கி கிடப்பது, போதை பொருள் பயன்ப டுத்துவதற்கு சமம்.
- போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கலாம்.
திருப்பூர் :
மாநில, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நல கல்வி அறக்கட்டளை சார்பில் திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி மேகலா மைதிலி தலைமை வகித்து பேசுகையில், சமூக ஊடகங்களில் மூழ்கி கிடப்பது, போதை பொருள் பயன்படுத்துவதற்கு சமம். எனவே, முதலில் நீங்கள் சமூக ஊடகங்களில் இருந்து வெளியே வர வேண்டும்.
உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கலாம். புகார்தாரர் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றார்.