உள்ளூர் செய்திகள்

கடத்தூர் அருகே கோவில் குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கடத்தூரில் கோவில் குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

Published On 2023-10-16 14:53 IST   |   Update On 2023-10-16 14:53:00 IST
  • கடத்தூரில் கோவில் குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • பழையான கோவில் குப்பை மேடாக மாறி வருகிறது.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் பழமையான ஆதி வினாயகர், சுப்பரமணியர், கோதண்டராமசாமி கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களுக்கு பின்புறம் சிறப்பு மிக்க கோவில் குளம் உள்ளது. இந்த கோவில் குளத்தின் தண்ணீரை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டாரப்பகுதி மக்களும் பல ஆண்டுக்கு முன்பு குடி தண்ணீராக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சமீப காலங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த குளத்தை சீரமைக்க பல லட்சம் பணம் சில ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டு பெயரளவில் மட்டுமே தூர்வாரி பணிகள் மேற்கொள்ளபட்டது.

தமிழக அரசு மாநிலம் முழுவதும் நீர் நிலைகளை மேம்படுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கைகள்  எடுத்து வரும் நிலையில் அதிகாரிகள் மற்றும் அறநிலையதுறையின் அலட்சியத்தால் இந்த பழமையான கோவில் குளம் குப்பை குழியாக மாறிவருகின்றது. இதை தடுக்க சமூக ஆர்வலர்கள் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரு கின்றனர். 

Tags:    

Similar News