உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கம்பத்தில் கஞ்சா வியாபாரி கைது

Published On 2022-09-22 10:08 IST   |   Update On 2022-09-22 10:08:00 IST
  • கம்பம் வடக்குபோலீசார் வாரச்சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • அப்பகுதியில் கஞ்சா விற்றவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கம்பம்:

கம்பம் வடக்குபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் வாரச்சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது உலகத்தேவர் தெருவை சேர்ந்த தங்கமலை(23) என்பவர் ஒரு கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.

போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News