உள்ளூர் செய்திகள்

தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைக்கும் கொள்ளை கும்பல் : பொதுமக்கள் அச்சம்

Published On 2023-10-18 15:32 IST   |   Update On 2023-10-18 15:32:00 IST
  • தருமபுரியில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைக்கும் கொள்ளை கும்பலால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • 5 கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கடந்த மாதம் 25 ந்தேதி பெங்களூரில் இருந்து கோவையை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் 5 கிலோ தங்கத்தை எடுத்து கொண்டு காரில் ஊழியர்களுடன் வந்தார்.

அப்போது அவர் பெங்க ளூரு- தருமபுரி தேசிய நெடுஞ்சா லையில் பூலப்பட்டி அருகே வந்தார்.அப்போது அவரை வழிமறித்த கொள்ளை கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி 5 கிலோ தங்கத்தை சொகுசு காருடன் கடத்தி சென்றனர். அதே போல காரிமங்கலம் அருகேயுள்ள பெரியம்பட்டியில் உள்ள பெருமாள்- பச்சையம்மன் கோவில்களில் உண்டியல் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அன்றே அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் புகுந்து தலைமை யாசிரியர் அறையின் கதவின் பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய கணினியை திருடி சென்றனர். அதே போன்று பாப்பாரப்பட்டி போலீஸ ்நிலையத்துக்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தூரத்து உறவினர் என்று சொல்லி நைசாக பேசிய ஒரு மர்ம பெண் ஒருவர் ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து வீட்டில் பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளை யடித்து சென்றார். அதே போன்று பாப்பாரப்பட்டி அருகேயுள்ள ஆலம ரத்துப்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் உறவினர் என்று வந்த மர்ம நபர் ஒருவர் அவர் வீட்டுக்கு சென்று அவருக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கலியை பறித்து சென்றார்.

அதே போன்று பிடமனேரி பகுதியில் மோகன்மேஸ்திரி காலனியில் கடந்த 14-ந்தேதி லோகநாதன் என்பவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் 15-ந்தேதி வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பிரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த நிலையில் நேற்று தருமபுரி- ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில் சீனிவாசன் என்பவர் வீட்டில் அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திரு்டி சென்று உள்ளனார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்;- கடந்த 2 மாதங்களில் தருமபுரியில் நடந்து வரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கொள்ளையர்கள் ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகள் மற்றும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைத்தே கைவரிசையை காட்டி வருகின்றனர்.

5 கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை இதில் எவரும் கைது செய்யப்படவில்லை.

தருமபுரியில் தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களால் பொது மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. வீட்டில் தனியாக இருக்கவும், வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்லவும் அஞ்சுகின்றனர். ஆகவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கொள்ளை யர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.                                                   

Similar News