விழாவிற்கு குழந்தைகள் விநாயகர் போல் வேடமணிந்து வந்துள்ளதை படத்தில் காணலாம்.
ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
- கலைநிகழ்ச்சிகள் வெகு விமர்சை யாக கொண்டா டப்பட்டது.
- மாணவர்கள் விநாயகர் போல் வேடமணிந்து வந்தனர்.
மொரப்பூர்,
ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி யில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 16-ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கோலா கலமாக கொண்டா டப்பட்டது.
இவ்வி ழாவில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளி யின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் கலந்துக்கொண்டு விநாயகப் பெருமானுக்கு ஆராதனைச் செய்து இவ்விழாவினை சிறப்புற தொடங்கினர்.
இதில் நடனம், நாடகம், விநாயகர் துதிப் பாடல், விநாயகர் பற்றிய சிறப்புரை போன்ற பல கலைநிகழ்ச்சிகள் வெகு விமர்சை யாக கொண்டா டப்பட்டது. மேலும் மாணவர்கள் விநாயகர் போல் வேடமணிந்து வந்தனர்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களைப் பள்ளியின் கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் மற்றும் பள்ளியின் பள்ளியின் முதல்வர் வெற்றி வேல் செல்வம் பெரு மைப்படுத்தி பாராட்டினர். மேலும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டு விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.