உள்ளூர் செய்திகள்

கந்தமாரி அம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-01-28 14:50 IST   |   Update On 2023-01-28 14:50:00 IST
  • கந்தமாரி அம்மன் , விநாயகர் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா சண்டி யாகம் நடைபெற்றது.
  • மகா தீப ஆராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திருப்பத்தூர் ரோட்டில் அமைந்துள்ள கந்தமாரி அம்மன் , விநாயகர் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா சண்டி யாகம் நடைபெற்றது.

கடந்த 25-ம் தேதி குருபூஜை, திருவிளக்கு வழிபாடு, ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை நடைபெற்றது. 26-ம் தேதி திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, சிவ சூரிய பூஜை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம், நவகிரக ஓமம் நடைபெற்றது.

மகா பூர்ணாகூதியை தொடர்ந்து, கந்தமாரி அம்மன் கோவில் கோபுரம் கும்பாபிஷேகம் நன்னீராட்டு நடைபெற்றது. சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று கந்த மாரியம்மனுக்கு நூதன ஆதி கந்த மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு விசேஷ சண்டி ஓமம் மங்கள திரவிய பொருள்கள் யாக வேள்வி நடைபெற்றது.

மகா தீப ஆராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News