உள்ளூர் செய்திகள்

கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் மனு கொடுத்த காட்சி


கடையத்தில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் - வைகோவிடம் பஞ்சாயத்து தலைவர் மனு

Published On 2023-01-21 09:05 GMT   |   Update On 2023-01-21 09:05 GMT
  • கடையம் அருகே அமைந்துள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் மூலம் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
  • அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இப்பகுதியில் இல்லாததால் இடைத்தரகர்கள் அதிக லாபம் அடைகின்றனர்.

கடையம்:

கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து கொடுத் துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியில், கடையம் அருகே அமைந்துள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் மூலம் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியில் விளை யக்கூடிய நெல்களை கொள்முதல் செய்ய அரசு நேரடி கொள்முதல் நிலையம் இல்லை. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்ற னர்.

எனவே ராமநதி அணை செல்லும் சாலையில், மரிமேடு என்னும் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி தர வேண்டும். அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இப்பகுதியில் இல்லாததால் இடைத்தரகர்கள் அதிக லாபம் அடைகின்றனர் . மேலும் விவசாயிகளுக்கு இழப்பும் ஏற்படுகிறது .

எனவே இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News