தருமபுரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல எதிர்ப்பு -சூளகிரி அருகே கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
- 500-க்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
- விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கெலவரிப்பள்ளி அணையில் இருந்து வெளியாகும் தண்ணீர் கால்வாய் வழியாக ஆழியாளம் தடுப்பணைக்கு வந்து நிரம்பிய பின்பு கீரணப் பள்ளி, தேவஸ்தானப்பள்ளி, அயர்னப் பள்ளி, ராமாபுரம் , வழியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு செல்கிறது. தென்பென்னை ஆற்றங்கரையோரம் 500-க்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
கடந்த ஆட்சியில் ஆழியாளம் தடுப்பணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக தருமபுரி துள்செட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்ல திட்டம் அறிவித்தனர். அதன் மூலம் தேவஸ்தானப் பள்ளிக்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார் மற்றும் ஒசூர் சப் -கலெக்டர் தேன்மொழி, சூளகிரி தாசில்தார் அனிதா மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.