உள்ளூர் செய்திகள்

வாக்குபதிவு எந்திரங்களை லாரியில் ஏற்றப்பட்ட போது எடுத்தபடம்

சூளகிரியில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றம்

Published On 2022-06-23 15:55 IST   |   Update On 2022-06-23 15:55:00 IST
  • தேர்தலில் பயன்படுத்திய 373 வாக்கு எந்திரங்கள், உபகரணங்கள்.
  • இரண்டு லாரிகளில் ஏற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, வேப்பனப் பள்ளி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்திய 373 வாக்கு எந்திரங்கள், உபகரணங்கள் தேர்தலுக்கு பயன்படுத்திய பின்பு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பூட்டி சீல் வைத்து காவலர் பாதுகாப்பில் இருந்தது.

சூளகிரி தாசில்தார் தேன்மொழி தலைமையில் மண்டல துணை வட்டாச்சியர் தேர்தல் அலுவலர் அருள்மொழி, காவலர், அலுவலர், கட்சியினர் முன்நிலையில் அறையை திறக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு 373 தேர்தல் எந்திரங்கள், உபகரணங்கள் துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு லாரிகளில் ஏற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 

Similar News