உள்ளூர் செய்திகள்

இருளர் இன மக்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்ட இலவச பயிற்சி

Published On 2023-07-19 15:24 IST   |   Update On 2023-07-19 15:24:00 IST
  • 19 வயதுக்கு மேற்பட்ட இருளர் இன மக்கள் அதற்காக சாதிச் சான்றிதழுடன் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • கிருஷ்ணகிரி யு.டி.ஐ. டிரஸ்ட் மூலம் 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு 2019-2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கு, அழிவின் விழிம்பில் உள்ள பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களுக்கு இலவசமாக நான்கு சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, லைசென்சும் பெற்று தரப்படுகிறது.

இதன் மூலம் இருளர் இன மக்கள் வேலை வாய்ப்பு பெற்று சமுதாயத்தில் முன்னேற இந்த திட்டம் வழிவகை செய்கிறது. இதில், 19 வயதுக்கு மேற்பட்ட இருளர் இன மக்கள் அதற்காக சாதிச் சான்றிதழுடன் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இவர்களுக்கு கிருஷ்ணகிரி யு.டி.ஐ. டிரஸ்ட் மூலம் 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஜாகீர்உசேன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உதவி திட்ட இயக்குனர் ராஜிவ்காந்தி, யு.டி.ஐ. டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணன், திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News