உள்ளூர் செய்திகள்

கற்போம் கணினி புத்தகத்துடன் குமரகுரு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளனர்.   

சோழசிராமணி அரசு பள்ளிக்கு ரூ.3 லட்சம் தொழில்நுட்ப சாதனங்கள் இலவசமாக வழங்கல்

Published On 2023-04-07 07:14 GMT   |   Update On 2023-04-07 07:14 GMT
  • குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது அமைப்பின் நிதியுதவி மூலம் இலவசமாக வழங்கினர்.
  • மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3,05,998 மதிப்புள்ள கணினிகள், புரொஜெக்டர், புரொஜெக்டர் திரை, மோடம் மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை, கோவை, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது அமைப்பின் நிதியுதவி மூலம் இலவசமாக வழங்கினர்.

இந்த தொழில்நுட்ப சாதனங்களை பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி, முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர் தளபதி சுப்பிரமணியன், குப்பிரிக்கா பாளையம் ஊராட்சி தலைவர் அரசு என்கிற பழனிசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் பள்ளி மாணவர்கள் கணினியின் அடிப்படைகளை எளிதில் கற்றுக்கொள்வதற்காக கற்போம் கணினி என்ற புத்தகத்தையும் தமிழில் தொகுத்து வழங்கியுள்ளனர்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இந்த முயற்சியை, அப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News