உள்ளூர் செய்திகள்

ஆனங்கூர் பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கல்

Published On 2023-03-25 16:00 IST   |   Update On 2023-03-25 16:00:00 IST
  • ஆனங்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது.
  • ஒரு பண்ணை குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம் ஆனங்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஆனங்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஒரு பண்ணை குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் (ஆனங்கூர் கிராம பண்ணை குடும்பங்கள் மட்டும்) வீதம் வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.

ஆகையால் அனைத்து விவசாயிகளும் வந்து தென்னங்கன்றுகளை பெற்றுக் கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தென்னங்கன்றுகள் இலவசமாக பெறுவதற்கு சிட்டா, ஆதார் நகல், ரேசன் அட்டை நகல், 1 போட்டோ மேலும் தங்களது தொலை பேசியை கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News