உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூரில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

பரமத்தி வேலூரில் இலவச சித்த மருத்துவம், ரத்த தான முகாம்

Published On 2022-12-19 15:06 IST   |   Update On 2022-12-19 15:06:00 IST
  • இலவச சித்த மருத்துவம் மற்றும் ரத்ததான சிறப்பு முகாம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
  • கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனிதர்களுக்கு வரும் நோய்கள், சிகிச்சை பெறும் முறை, நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விளக்கி பேசினார்.

பரமத்தி வேலூர்:

6-வது தேசிய சித்த மருத்துவ நாளை கொண்டா டும் வகையில், பரமத்தி வேலூர் நண்பர்கள் குழு, அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை, நன்செய் இடையாறு சங்கர கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, நாமக்கல் அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவம் மற்றும் ரத்ததான சிறப்பு முகாம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். நண்பர்கள் குழு தலைவர் கேதாரநாதன் வரவேற்றார். வேலூர் நகர வர்த்தக தலைவர் சுந்தரம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பள்ளியின் செயலாளர் செல்வராசு ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சித்ரா சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மனிதர்களுக்கு வரும் நோய்கள், சிகிச்சை பெறும் முறை, நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விளக்கி பேசினார். முகாமில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனை சித்த மருத்துவர் பர்வேஸ் பாபு தலைமையில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிவகாமி (பரமத்தி ), சித்ரா(கபிலர்மலை), கோகிலா (நல்லூர்), நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீனா, நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் கவிதா, சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் ஆகியோர்

கொண்டகுழுவினர், முகாமில் கலந்து கொண்ட

வர்களுக்கு பரிசோதனை களும், சிகிச்சைகளும் அளித்தனர்.

அதேபோல் நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீனா தலைமை யிலான குழுவினர் ரத்த தான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தம் எடுத்தனர். இதில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தனர். முடிவில் நண்பர்கள் குழு முன்னாள் தலைவர் சந்திரன் நன்றி கூறினார். முகாமில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

Similar News