உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
- பசுமைப் போா்வை திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
- விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வெள்ளக்கோவில் வேளாண் விரிவாக்கம் மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் பசுமைப் போா்வை திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
தங்களுடைய சொந்த நிலங்களில் மரங்களை வளா்க்க விரும்பும் விவசாயிகள் செல்போனில் உழவன் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும், வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம்.தற்போது, தேக்கு மரக்கன்றுகள் வந்துள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வெள்ளக்கோவில் வேளாண் விரிவாக்கம் மையம் தெரிவித்துள்ளது.