உள்ளூர் செய்திகள்

வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்த போது எடுத்த படம்.

ஆலங்குளம் ஒன்றியத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் - யூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்

Published On 2023-01-25 09:10 GMT   |   Update On 2023-01-25 09:10 GMT
  • முகாமை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
  • வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் வன விலங்குகள் வழியே ரேபிஸ் நோய் பரவும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஆ. மருதப்பபுரம் கிராமத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் ஆகியோரின் அறிவு ரைப்படி தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி வரவேற்றார். நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி மணிமாறன் முன்னிலை வகித்தார்.

அதனை தொடர்ந்து நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் ஜான் சுபாஷ் வெறிநோய் குறித்து பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார். வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் வன விலங்குகள் வழியே ரேபிஸ் நோய் பரவும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

முகாமில் நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், ஆலங்குளம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் ஊத்துமலை ரமேஷ், நெட்டூர் ராமசெல்வம், கீழக்கலங்கல் கவிநிலவன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மகேஷ், தினேஷ், உதவியாளர்கள் கீதா, பிச்சையா மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன் பெற்றனர்.

ஆலங்குளம் கால்நடை மருத்துவர் ராஜஜுலியட் நன்றி கூறினார்.

Tags:    

Similar News