உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தது.

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

Published On 2023-01-20 15:25 IST   |   Update On 2023-01-20 15:25:00 IST
  • அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தஞ்சாவூர்:

கும்பகோணம் ஒன்றியம், பெரும்பாண்டி ஊராட்சியில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார்.

பெரும்பாண்டி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு செயலாளர் சரோஜா பாஸ்கர் தலைமை தாங்கினார்.

முகாமில் ரத்த அழுத்தம், சக்கரை நோய் அளவு, உப்பு அளவு, கண் நோய் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முகாமில் பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் அசோக்குமார் தலைமையில் செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

இதில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை கள ஒருங்கி ணைப்பாளர் நாரயணவடிவு, அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.

முடிவில் பெரும்பாண்டி ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News