உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாமில் குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

திருத்துறைப்பூண்டியில், இலவச மருத்துவ முகாம்

Published On 2023-01-23 13:44 IST   |   Update On 2023-01-23 13:44:00 IST
  • ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
  • பொதுமக்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம், திருத்துறைப்பூண்டி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து இலவச இருதய, சர்க்கரை மற்றும் பொது மருத்துவ முகாம் திருத்துறைப்பூண்டி எஸ்.வி.எஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.

முகாமிற்கு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்க தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன் தலைமை தாங்கினார்.

ராய் டிரஸ்ட் நிறுவன தலைவர் லயன் துரை ராயப்பன் முகாமை தொடங்கி வைத்தார். அரிமா சங்க சாசன தலைவர் லயன் மருத்துவர் முகம்மது ஆரிப், மண்டல தலைவர் லயன் ஸ்ரீநாத், வட்டார தலைவர் லயன் கண்ணன், பொருளாளர் லயன் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நூற்றாண்டு அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் மூத்த ஆலோசகர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 850-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும், 85- க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இதில் சங்க உறுப்பினர்கள் லயன் நிஜாம் முகமது, லயன் கார்த்திகேயன், லயன் மாதவன், பொறியாளர் லயன் ரகு, லயன் மகேஷ், லயன் அகல்யா மணி , லயன் பார்த்திபன், லயன் ராஜ்மோகன், லயன் மாரியப்பன், கீழையூர் லயன் மோகன், லயன் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரிமா சங்க செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News