விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கிய காட்சி.
4 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம்: மதியழகன் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்
- கிருஷ்ணகிரியில் 4 இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
- மதியழகன் எம்.எல்.ஏ நடத்தி வைத்தார்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாடி நபி விழாக்குழு சார்பில், அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்ட 4 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடந்தது. இந்த விழாவிற்கு மிலாடி நபி விழாக்குழு தலைவரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரு மான அஸ்லம் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ஜாமீர், முகம்மது யஹியா, நதீம், கவுன்சிலர்கள் பிர்தோஸ்கான், மதீன், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கராமத் வரவேற்றார். விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் பீரோ, கட்டில், மெத்தை, கை கடிகாரம், சில்வர் பாத்திரங்கள், துணிகள் அடங்கிய சீர்வரிசையாக 4 ஜோடிகளுக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தினார்.
தொடர்ந்து பிரியாணி விருந்தை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தவைர் தட்ரஅள்ளி நாகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலா ளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், ரியாஸ், முத்து குமரன், கவுன்சிலர்கள் வேலுமணி, மதன்ராஜ், ஜெயக்குமார், சீனிவாசன், முகமதுஆசிப், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.