உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலவச சைக்கிள்களை வழங்கிய காட்சி.

உடன்குடி அருகே பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2023-08-08 08:57 GMT   |   Update On 2023-08-08 08:57 GMT
  • வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
  • இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலை ப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., குருசந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஞானராஜ் வரவேற்றார். தாசில்தார் வாமனன், பள்ளித்தாளாளர் ராஜேஷ், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், துணைச்சேர்மன் மீராசிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

இதில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரி சங்கர், வெள்ளாளன்விளை ஊராட்சிதலைவர் ராஜரத்தினம், உடன்குடி பேரூராட்சி துணை த்தலைவர் மால் ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன், உடன்குடி பேருராட்சி கவுன்சிலர் ஜாண்பா ஸ்கர், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், சிராஜூதீன், மணப்பாடு ஜெயபிரகாஷ், ராஜாபிரபு, மாவட்ட அணி அமைப்பா ளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர்அணி மகாவிஷ்ணு, வெள்ளா ளன்விளை செயலாளர் லியாஷ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் அதனாஷியஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News