உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய போது எடுத்த படம்.

திருச்செந்தூர் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2023-08-01 08:43 GMT   |   Update On 2023-08-01 08:43 GMT
  • திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 53 மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
  • திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மைப்பணிக்காக தலா ரூ.2 லட்சம் மதிப்பில் 9 மின்கல வாகனங்களை வழங்கி, அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர்:

தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் கங்கா கவுரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 195 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ரூ.35 ஆயிரம் கோடியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். அரசுப்பள்ளி எல்லா வகையிலும் உயரவேண்டும் என்பதற்காகவும், புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார் பெயரில் ரூ.7 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி அந்தப்பணி பள்ளிகள் தோறும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலினின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களே ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் ஆசிரியை ரீட்டா நன்றி கூறினார்.

இதேபோல, திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ஷிபாஜெனி அமுதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 53 மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலவச சைக்கிள்களை வழங்கினார். 15-வது நிதிநிலை மானியக்குழு சார்பில் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மைப்ப ணிக்காக தலா ரூ.2 லட்சம் மதிப்பில் 9 மின்கல வாகனங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கி, அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலா, தி.மு.க. வர்த்தக அணி இணைச்செயலர் உமரிசங்கர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ் குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பிச்சம்மாள் ஆனந்த், துணைத்தலைவர் கவிதா, உறுப்பினர்கள் கிருஷ்ண வேணி, நகராட்சி உறுப்பினர்கள் ஆனந்த ராமச்சந்திரன், சுதாகர், கண்ணன், அந்தோணிட்ரூமன், ரேவதி கோமதிநாயகம், முத்து ஜெயந்தி, லீலா, நகர துணை செயலாளர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News