உள்ளூர் செய்திகள்

தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிய காட்சி.

அதியமான் கோட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Published On 2023-08-09 10:14 GMT   |   Update On 2023-08-09 10:14 GMT
  • இங்கு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி யில் சிறந்து விளங்க வேண்டும்.
  • மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி நன்கு படித்து முன்னேற வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு அரசு இலவச மிதி வண்டி வழங்கும் திட்டம் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு 158 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகை யில் இந்த பள்ளியில் கடந்த ஆண்டு படித்த சதீஷ்குமார் என்பவர் கோயம்புத்தூர் தனியார் மருத்துவ கல்லூரியிலும், இளங்கோ வன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி யிலும், மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

எனவே இங்கு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி யில் சிறந்து விளங்க வேண்டும்.

மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி நன்கு படித்து முன்னேற வேண்டும் என்றார்.

விழாவில் உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், எஸ்.எம்.சி. தலைவி கண்ணகி, முருகன், சிவக்குமார், தமிழ் ஆசிரியர் ஜெயவேல், கோவிந்தம்மாள், ஜெய்சங்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News