உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் வேலை தருவதாக கூறி பெண் உட்பட 2 பேரிடம் ரூ.23½ லட்சம் மோசடி

Published On 2023-01-03 15:14 IST   |   Update On 2023-01-03 15:14:00 IST
  • ஆன்லைனில் வேலை தருவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்
  • வங்கி கணக்கில் ரூ.10,33,729 செலுத்தியுள்ளார்.

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் லோக முனியப்பன். இவரது மனைவி கோதை (வயது 26). கடந்த மாதம் 12-ந் தேதி இவரது செல்போன் வாட்ஸ்அப்பிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ஆன்லைனில் வேலை தருவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

அதை உண்மை என்று நம்பிய கோதை, அந்த ஆன்லைன் வேலை கிடைப்பதற்காக பதிவு செய்துள்ளார். மேலும் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.10,33,729 செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி எந்த ஒரு வேலையும் ஆன்லைனில் தராததால் சந்தேகம் அடைந்த கோதை அவர்கள் குறிப்பிட்ட வெப்சைட்டை பார்த்தபோது அது முடக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோதை, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதே போல் சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி அடுத்த மீனகாடு பகுதியைச் சேர்ந்தவர் மதுரையன். இவரது மகன் நடேசன் (36). இவருக்கும் ஆன்லைனில் வேலை தருவதாக வந்த வாட்ஸ் அப் தகவலின் பெயரில், அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.13,28,159 செலுத்தியுள்ளார். ஆனால் ஆன்லைன் வேலை எதுவும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, நடேசன் சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார்.இதுகுறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News