உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் நடைபெற்ற பஸ்நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.

தூத்துக்குடியில் ரூ.200 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

Published On 2023-10-09 09:07 GMT   |   Update On 2023-10-09 09:07 GMT
  • புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாநகராட்சி பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
  • இதில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தும், கட்டிடங்களை திறந்து வைத்தும் பேசினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பஸ் நிலையம் திறப்பு விழா மற்றும் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாநகராட்சி பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன் வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்று பேசினார்.தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தும், கட்டி டங்களை திறந்து வைத்தும் பேசினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ். சப்-கலெக்டர் கவுரவ்குமார், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உமரி சங்கர், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலை வர்கள், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரி கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News