உள்ளூர் செய்திகள்

யானையை பரிசோதித்த வனத்துறை அதிகாரிகள்.

மாயூரநாதர் கோவில் யானையை பரிசோதித்த வனத்துறை அதிகாரிகள்

Published On 2023-07-06 15:22 IST   |   Update On 2023-07-06 15:22:00 IST
  • மாயூரநாதர் கோவிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • யானையின் கண், தோல், பாதம்,ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர்.

சீர்காழி:

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த யானையை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார், மீனா ஐ.எப்.எஸ் பரிந்துரையின் பேரில் உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், யானைகள் ஆராய்ச்சி மாவட்டக்குழு உறுப்பினர் சிவகணேஷ், வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது யானையின் கண், தோல், பாதம், யானையின் வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் யானையை நடக்க வைத்து பரிசோதித்த அதிகாரிகள், யானைக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி யானைப்பாகன் செந்திலிடம் கேட்டறிந்தனர்.

அப்போது, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News