உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்க பழனியில் சோலார் மின் வேலிகளில் வனத்துறை ஆய்வு

Published On 2023-09-23 11:49 IST   |   Update On 2023-09-23 11:49:00 IST
  • தமிழகத்தில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
  • விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்வேலிகளில் முறைகேடாக மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என ஆய்வு நடத்தினர்.

பழனி:

தமிழகத்தில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மின்வேலிகள் விதிகள் -2023 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலி, சோலார் மின்வேலி குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கொழுமம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பழனி, ஆண்டிபட்டி, பொந்து ப்புளி, பாப்பம்பட்டியில் வனப்பகு தியை ஒட்டியுள்ள பகுதி களில் திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், கொழுமம் வனச்சரக அலுவலர் பிரபு, பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த், சிவக்குமார் ஆகி யோர் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்வேலிகளில் முறைகேடாக மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என ஆய்வு நடத்தினர்.

மேலும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து விவ சாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

Tags:    

Similar News