உள்ளூர் செய்திகள்

மற்ற ஆட்டோ ஸ்டாண்டுகளில் இருந்து வரும் ஆட்டோக்களால் தருமபுரி ரெயில் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இன்றுகாலை பயணிகளை சவாரி ஏற்ற அணிவகுத்து நின்ற ஆட்டோக்களை படத்தில் காணலாம்.

மற்ற ஸ்டாண்டுகளில் இருந்து வந்து வலுக்கட்டாயமாக ஏற்றுகின்றனர்: தருமபுரி ரெயில்நிலையத்தில் அத்துமீறும் ஆட்டோக்களால் பயணிகள் தவிப்பு

Published On 2022-10-16 08:17 GMT   |   Update On 2022-10-16 08:17 GMT
  • சவாரி ஏற்றுவதில் போட்டா போட்டியில் ஈடுபடுகின்றனர்.
  • சவாரிக்கு அழைத்து அத்து மீறுவதால் பயணிகளும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி ரெயில் நிலையத்தில் தனியாக ஆட்டோ நிறுத்தம் உள்ளது. அங்கு சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. இந்நிலையில் தருமபுரி பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரெயில் நிலையத்துக்கு சவாரி ஏற்றி வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் ரெயில் நிலையத்திலிருந்து மீண்டும் சவாரி ஏற்றுவதில் போட்டா போட்டியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் ரெயில் நிலையத்தை மையமாக வைத்து செயல்படும் ஆட்டோ டிரைவர்கள் சவாரி கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.

ஆட்டோ சவாரியை பொறுத்தவரை குறிப்பிட்ட ஸ்டாண்டுகளில் உள்ள ஆட்டோக்களில் மட்டுமே சவாரி ஏற்ற முடியும். மற்ற ஸ்டாண்டுகளில் உள்ளவர்கள் அங்கு வந்து சவாரி ஏற்ற மாட்டார்கள்.

இதை மீறி தருமபுரி ரெயில் நிலையத்துக்கு வரும் பிற ஸ்டாண்டுகளை சேர்ந்த ஆட்டோ டிரை வர்கள் வலுக்கட்டாயமாக சவாரிக்கு அழைத்து அத்து மீறுவதால் பயணிகளும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இந்த ஆட்டோக்களால் தருமபுரி ரெயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதனால் குறித்த நேரத்திற்குள் ரெயிலை பிடிக்க முடியாததால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

விதிகளை மீறி ரெயில் நிலையம் முன்பு வலுக்கட்டாயமாக சவாரிக்கு அழைத்து செல்வதை ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

Similar News