உள்ளூர் செய்திகள்

விழுந்தமாவடியில் நான்கு ஆண்டுகளாக சாய்ந்து கிடக்கும் உயர் கோபுர மின்விளக்கு

Published On 2022-10-12 10:10 GMT   |   Update On 2022-10-12 10:10 GMT
  • மீனவர்களின் வசதிக்காக கடற்கரை ஓரம் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு பல இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கபட்டது.
  • எந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் விழுந்த மின்கம்பம் நான்கு ஆண்டுகளாக கடற்கரையில் அப்படியேவிழுந்த படிகிடக்கிறது.

வேதாரண்யம் அக்12-

வேதாரண்யம் தாலுகா விழுந்தமாவடி மீனவர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர்

நாள்தோறும் பைபர் படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்மீனவர்களின் வசதிக்காக கடற்கரை ஓரம் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு பல இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கபட்டது.

இந்த உயர்கோபுர மின்விளக்கால் கடற்கரை முழுவதும் இருள் இல்லமால் மீனவர்களுமிகுந்த பயனுள்ளதாக இருந்தது மேலும் இந்த மின்கோபுர விளக்கின் வெளிச்சத்தை அடையாளம் வைத்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கரை திரும்பினர் இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில்இந்த மின் கோபுர விளக்கு முறிந்து விழுந்தது

கடந்த நான்கு ஆண்டுகளாக விழுந்த மின்கம்பத்தை சீர் செய்து புதிதாக மின்கம்பம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் பல்வேறு முறை கோரிக்கை வைத்தனர்.

ஆனால் எந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் விழுந்த மின்கம்பம் நான்கு ஆண்டுகளாக கடற்கரையில் அப்படியேவிழுந்த படிகிடக்கிறதுஉடனடியாக இந்த மின் கம்பத்தை சீர் செய்ய வேண்டும் என கிராம பஞ்சாயத்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News