விவசாயிகளுக்கு உழவன் செயலியின் பயன்பாடு குறித்த பயிற்சி
- உள் மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது.
- விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி ,
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்த உள் மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமமான பையர் நத்தம் கிராமத்தில் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக உதவி பொறியாளர் சாணக்கியன், வேளாண்மை துறையின் சார்பாக துணை வேளாண்மை அலுவலர் ஆறுமுகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் தண்டபாணி, செல்வம் மற்றும் தோட்டக்கலை துறையின் உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்தும், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
இப்ப பயிற்சியில் வட்டார உழவர் ஆலோசனை குழு தலைவர் சண்முகம் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்பங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.