உள்ளூர் செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - விசாரணை அறிக்கை ஒப்படைப்பு

Published On 2022-11-17 18:54 GMT   |   Update On 2022-11-17 18:54 GMT
  • விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை:

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன் இறந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவ குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிகிச்சையின் போது மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள்மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் காவல்துறைக்கு கிடைக்காததால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம், காவல்துறையிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளுவார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News