உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் கால்பந்து போட்டி

Published On 2023-02-05 09:20 GMT   |   Update On 2023-02-05 09:20 GMT
  • திருப்பூர் அணி 1-0 என்கிற கோல்கள் கணக்கில் புதுக்கோட்டை அணியையும் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
  • தேசிய மூத்தோர் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பெண்டா நாகராஜ், நஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

அரவேணு,

கோத்தகிரி காந்தி மைதானத்தில் ராவ்பகதூர் ஆரிகவுடர் நினைவுக் கோப்பைக்கான மாநில அளவிலான மூத்தோர் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், வியாசர்பாடி மற்றும் நீலகிரி ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடியது.

இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் கேரள அணி சென்னை அணியை 5-0 என்ற கோல்கள் கணக்கிலும், திண்டுக்கல் அணி, கோவை அணியை 1-0 என்கிற கோல்கள் கணக்கிலும், நீலகிரி அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் சென்னை வியாசர்பாடி அணியையும், திருப்பூர் அணி 1-0 என்கிற கோல்கள் கணக்கில் புதுக்கோட்டை அணியையும் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

நாளை காலை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் கேரளா மற்றும் திண்டுக்கல் அணிகளும், 2வது அரையிறுதிப் போட்டி யில் நீலகிரி மற்றும் திருப்பூர் அணிகளும் விளையாடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது.

இந்த போட்டிகளை தேசிய கால்பந்து நடுவர் பால கிருஷ்ணன் தலைமையில் தேசிய மூத்தோர் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பெண்டா நாகராஜ், நஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News