உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் பூக்களின் விலை கடும் உயர்வு- மல்லிகை பூ கிலோ ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை

Published On 2022-12-10 08:55 GMT   |   Update On 2022-12-10 08:55 GMT
  • ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
  • விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொது மக்கள் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

ஆலங்குளம்:

முகூர்த்த நாட்கள் நாளை முதல் தொடர்ந்து 2 நாட்கள் வருவதை யொட்டி தென்காசி மாவட்டத்திலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் நேற்று ரூ.1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இதே போல் கிலோ ரூ.850-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,500-க்கு விற்பனையானது. விலை அதிகரித்து காணப்பட்டாலும் தேவை அதிகரிப்பால் வியாபாரிகளும், பொது மக்களும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சில இடங்களில் மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

Tags:    

Similar News