உள்ளூர் செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம் நேரில் ஆய்வு
- பரிசல் ஓட்டிகள் மற்றும் மீன் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- மாவட்ட பொருளாளர் தங்கமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
ஒகேனக்கல்,
தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் தெற்கு ஒன்றியம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் காவிரியில் அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்படுவதை அடுத்து தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி நேரில் பார்வையிட்டு அங்குள்ள பரிசல் ஓட்டிகள் மற்றும் மீன் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மடம்.முருகேசன் , மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் , மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் , மாவட்ட பொருளாளர் தங்கமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.