உள்ளூர் செய்திகள்

வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதியை எம்.எல்.ஏ. ஜி.கே. மணி பார்வையிட்ட போது எடுத்தபடம்.

ஒகேனக்கல்லில் வெள்ளம் பாதித்த பகுதிகளை எம்.எல்.ஏ ஆய்வு

Published On 2022-08-05 15:43 IST   |   Update On 2022-08-05 15:43:00 IST
  • வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
  • குடியிருப்புகளில் நீர் புகுந்தும் பாதிக்கப்பட்டதை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2.50 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒகேனக்கல் நாடார் கொட்டாய், சத்திரம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

ஒகேனக்கல் ஆற்றின் கரைப்பகுதியில் வசிக்கும் பல்வேறு மக்களின் வீடுகள் வெள்ளத்தினால் இடிந்து சேதம் அடைந்தும், பல்வேறு குடியிருப்புகளில் நீர் புகுந்தும் பாதிக்கப்பட்டதை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் கெம்புராஜ், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன் மற்றும் ரங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், பா.ம.க மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில இளைஞரணி இணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News