உள்ளூர் செய்திகள்

பொம்மிடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயத்தின் கொடியேற்று நிகழ்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த கர்தினால் பூலா அந்தோணியை ஊர் தலைவர் எம் எப். ரமேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பொம்மிடி கோடி அற்புதர் அந்தோணியார் ஆலய கொடியேற்று விழா

Published On 2023-06-05 10:01 GMT   |   Update On 2023-06-05 10:01 GMT
  • பொம்மிடியில் ஹெலிகாப்டரை பார்ப்ப தற்கும் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
  • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அற்புதங்கள் நடப்பதாக கிறிஸ்தவர்கள் இடையே அதிக நம்பிக்கை இருப்பதால் ஆண்டு முழுவதும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வந்து செல்வர்.

இந்த ஆலயத்தின் வருடாந்திர தேர் திருவிழா ஆண்டுதோறும் புனித அந்தோணியாரின் நினைவு நாளான ஜூன் 13ஆம் தேதி திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆண்டின் வருடாந்திர திருவிழா வெகு விமர்சை யாக நேற்று 4-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

இதற்காக சிறப்பு அழைப்பா ளராக தென்னிந்தி யாவின் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் பூலா அந்தோணி கொடியேற்றத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்திருந்தார்.

அவருக்கு தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், ஊர் தலைவர் எம்.எப்.ரமேஷ், பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் ஆகியோர் தலைமையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் மற்றும் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேரணியாக வந்து ஆலய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பின்பு பூலா அந்தோணி ஆடம்பர சிறப்பு திருப்பலி நிறை வேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலய வளாகத்தில் உணவு வழங்கப்பட்டது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ், ஊர் தலைவர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பொம்மிடியில் ஹெலிகாப்டரை பார்ப்ப தற்கும் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பாதுகாப்பு பணியினை அரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் பாப்பி ரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், சக்தி வேல் ஆகியோர் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News